Author Topic: ~ சின்ன வெங்காய ரசம் ~  (Read 445 times)

Offline MysteRy

~ சின்ன வெங்காய ரசம் ~
« on: April 30, 2016, 09:07:00 PM »
சின்ன வெங்காய ரசம்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு
சிறிய வெங்காயம் 10, தோலுரித்து நறுக்கியது.
தக்காளி – ஒன்று
ஒரு கோலிகுண்டு அளவு புளி
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு 1/2 டீஸ்பூன்
ரசப்பொடி – ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் சிறிதளவு
பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் – 3
நெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமலி தழை – சிறிதளவு



செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைத்து, லேசாக மசித்துக் கொள்ளவும்.

தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி லேசாக மசித்துக் கொள்ளவும்.

சீரகம், மிளகு இவற்றை கிக்சியில் லேசாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நெய்யை விட்டு கடுகு தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் இவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் இத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பிறகு இத்துடன், மசித்த துவரம்பருப்பு, புளிக் கரைசல், மசித்த தக்காளி, ரசப் போடி, தேவையான அளவு தண்ணீர், உப்பு , மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து, மிதமான தீயில் ரசம் நுரை வரும் வரை கொதிக்க விடவும். நுரை வந்தவுடன், அடுப்பை அனைத்து, கொத்தமல்லி தழை தூவி கடாயை சிறிது மூடி வைக்கவும்.

சுவையான சிறு வெங்காய ரசம் தயார்.