Author Topic: ~ சப்பாத்தி லட்டு ~  (Read 375 times)

Offline MysteRy

~ சப்பாத்தி லட்டு ~
« on: April 27, 2016, 08:46:58 PM »
சப்பாத்தி லட்டு



தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 3
வெல்லம் – 1/4 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சப்பாத்தியை தோசைக்கல்லில் போன்று மொறுமொறுவென்று டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு துண்டுகளாக உடைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அத்துடன் வெல்லம் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஏலக்காய் பொடி, நெய், நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு கையளவு எடுத்து லட்டு போன்று உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி அனைத்தையும் செய்தால், சப்பாத்தி லட்டு ரெடி!!!

Offline Mohamed Azam

Re: ~ சப்பாத்தி லட்டு ~
« Reply #1 on: April 29, 2016, 12:33:34 AM »
;D ;D Enna Ithu? ;D ;D