Author Topic: ~ மலபார் சாம்பார் ~  (Read 345 times)

Offline MysteRy

~ மலபார் சாம்பார் ~
« on: April 26, 2016, 09:48:26 PM »
மலபார் சாம்பார்

துவரம் பருப்பு – 1 பெரிய கப்,
சாம்பார் வெங்காயம் – 1 கப்,
தக்காளி – 2,
புளி – எலுமிச்சை அளவு,
பெருங்காயம் – சிறு மிளகு அளவு,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை,
கொத்தமல்லி – சிறிது,
நெய் – தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
தேங்காய் எண்ணெய் – சிறிது,
வெள்ளை பூசணிக்காய் – 1 துண்டு.

தாளிக்க:

கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய்,
காய்ந்த மிளகாய் – 2,
வெந்தயம் – அரை டீஸ்பூன்.

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் – 6-8,
பெருங்காயம் – சிறிது,
தனியா – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் – அரை மூடி,
வெந்தயம் – கால் டீஸ்பூன்.



துவரம் பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வேக வைத்து மசிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து அரைக்கவும். பூசணிக்காயில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, சாம்பார் வெங்காயம், நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கி, உப்பு, கரைத்து வடிகட்டிய புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பிறகு அதில் பூசணிக்காய், வெந்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்த மசாலாவில் தண்ணீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.