Author Topic: ~ சிக்கன் ரொட்டி ரோல் ~  (Read 326 times)

Offline MysteRy

~ சிக்கன் ரொட்டி ரோல் ~
« on: April 26, 2016, 09:00:55 PM »
சிக்கன் ரொட்டி ரோல்



தேவையான பொருட்கள்

சப்பாத்தி செய்ய
கோதுமை மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவைகேற்ப
சிக்கன் கிரேவி செய்ய
சிக்கன் எலும்பு இல்லாதது – அரை கப் (சுத்தம் செய்தது)
எண்ணெய் – தேவையான அளவு
சோல மாவு – தேவையான அளவு
வெங்காயம் – இரண்டு
இஞ்சி, பூண்டுவிழுது – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப

செய்முறை

சப்பாத்தி செய்முறை:

கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்து எடுக்கவும்.

சிக்கன் கிரேவி செய்முறை:

சிக்கன் துண்டுகளை சோல மாவில் முக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பொறித்த சிக்கன் துண்டுகளை போட்டு முன்று நிமிடகள் கழித்து சோல மாவு கரைச்சல் (தண்ணீர் ஊற்றி கரைக்கவும்) அரை டம்ளர் ஊற்றி கிளறி ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி துவி ஏறகவும்.
பின் சப்பாத்தின் மேல் சிக்கன் கிரேவி தடவி ரோல் செய்து பரிமாறவும்.