Author Topic: ~ காலணிகள் விடயத்தில் கவனம் தேவை! ~  (Read 1108 times)

Offline MysteRy

காலணிகள் விடயத்தில் கவனம் தேவை!

முறையான காலணிகளை அணியாமல் இருப்பது உங்கள் நடையை மாற்றும், மேலும் நீங்கள் சமநிலையில் நடக்க முடியாமல் தவிப்பீர்கள்.



முதலில் நீங்கள் தேர்வு செய்யும் காலணியின் அளவு சரியாக இருப்பதை நீங்கள்உறுதி செய்ய வேண்டும்.
உங்கள் கால் பாதங்களைவிட பெரியதாக இருக்கும் காலணிகளை நீங்கள் அணியும் போதுஉங்கள் கால்கள் பார்ப்பதற்கு நன்றாகஇருக்காது.
அதே வேளையில்உங்கள் கால் பாதங்களை மிகவும் இறுக்கமாக பிடித்துக்கொள்ளும் காலணிகளை நீங்கள் அணிந்தால் இரத்த ஓட்டம் தடைபடும்.
உங்களின் கால்பாத அளவினை சரியாக அளந்து அதற்கு ஏற்றார் போல் காலணிகளை வாங்க வேண்டும்.
நீங்கள் குதிகால் உயர்த்திய காலணிகளை அணிந்து நடக்கும் போதுஉங்கள் நடையில் அதிகளவு கவனம் செலுத்துவது சற்று விசித்திரமாக இருக்கும்.
குதிகால் உயர்த்திய காலணிகளை அணிந்துக் கொண்டு பொறுமையாக நடந்தாலே போதும்.
வேகமாக நடந்தால் பின்விளைவு மிக விபரீதமாகத்தான் முடியும்.
அதிக தூரம் நடப்பது என்றால், குதிகால் உயர்த்திய காலணிகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் கால் சதைகளுக்குத் தேவையில்லாத அழுத்தத்தைக் கொடுக்கும்.
குதிகால் உயர்த்திய காலணிகளை அணிந்து அதிகம் நேரம் நடந்தாலோ அல்லது நின்று கொண்டிருந்தாலோ சற்று நேரம் அமர்ந்து உங்கள் கால்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
இது உங்கள் கால் சதைகளை சற்று தளர்த்தும், பிறகு மீண்டும் நீங்கள் எழுந்து சுலபமாக நடக்கலாம்.