Author Topic: ~ மணத்தக்காளி வத்தல் குழம்பு ~  (Read 344 times)

Offline MysteRy

மணத்தக்காளி வத்தல் குழம்பு



சின்ன வெங்காயம் – 100 கிராம்
மணத்தக்காளி வத்தல் – 50 கிராம்
பூண்டு – 10 பல்
புளி ,உப்பு ,கருவேப்பிலை-தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தேங்காய் – 2 பத்தை
மிளகு – 10
சீரகம் – அரை ஸ்பூன
தக்காளி – 1
நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
கடுகு ,வெந்தயம் – சிறிதளவு

செய்முறை:

சின் ன வெங்காயத்தை கட்பண்ணி பூண்டை தோல் உரித்து வைக்கவும்
தேங்காய் , மிளகு , சீரகம் இவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் சுடவைத்து கடுகு ,வெந்தயம் ,கருவேப்பிலைபோட்டு தாளிக்கவும்
அதில் வத்தலை போட்டு நன்கு வறுக்கவும் இதனுடன் சின்னவெங்காயம் ,பூண்டு போட்டு வதக்கவும். பின் அனைத்து தூள்களையும் வதக்கவும்.தக்காளியும் சேர்த்து வதக்கவும்
இதனுடன் புளியை கரைத்து ஊற்றி அரைத்தவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்