Author Topic: ~ கணவா வடை ~  (Read 329 times)

Offline MysteRy

~ கணவா வடை ~
« on: April 25, 2016, 08:12:43 PM »
கணவா வடை



தேவையான பொருட்கள் :

கணவா – 5
பெரிய வெங்காயம் – ஒன்று
முட்டைக்கோஸ் – கால் கப்
காரட் – 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – ஒன்று
மிளகு – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – 2 கொத்து
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – கால் கப்

செய்முறை :

கணவாவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். காரட் மற்றும் முட்டைக்கோஸை துருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் மிளகு, கணவா, உப்பு போட்டு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றுடன் நறுக்கின வெங்காயம், காரட், முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் கணவா கலவையை வட்டமாக தட்டி தோசைக்கல்லில் போடவும்.
3 அல்லது 4 நிமிடங்கள் கழித்து திருப்பிப் போட்டு 2 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான கணவா வடை ரெடி.