Author Topic: ~ செட்டுநாடு சிக்கன் கிரேவி ~  (Read 360 times)

Offline MysteRy

செட்டுநாடு சிக்கன் கிரேவி

தேவையானவை :-

சிக்கன் – 350 கி.
சின்ன வெங்காயம் – 15,
வெள்ளைப் பூண்டு – 10 பல்,
தக்காளி 2 ,
(சிவப்பு மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
மல்லிப் பொடி – 3 டேபிள் ஸ்பூன்).அல்லது

மசாலாவுக்கு :-

சிவப்பு மிளகாய் – 10,
மல்லி – 3 டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன், )
இவற்றை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். இதில் மஞ்சள் தூள், 4 சின்ன வெங்காயம், 2 பூண்டுப் பல் போட்டு மைய அரைக்கவும்.
எண்ணெய் – 3
உப்பு – 2 டீஸ்பூன்,
பட்டை இலை – 2 இன்ச்,
பட்டை – 2 இன்ச்,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 2.
கருவேப்பிலை – 1 இணுக்கு



செய்முறை:-

கோழியைக் கழுவி ப்ரஷர் குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிடவும். மசாலாவை மைய அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு இரண்டாக நறுக்கிய வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். தக்காளியைப் பொடியாக அரிந்து போட்டு வதக்கவும். இதில் அரைத்த மசாலாவைப்போட்டு வதக்கி எண்ணெய் பிரிந்ததும், வேக வைத்த சிக்கன், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.

மேலும் சுவை கூட்ட மற்றும் அதிக கிரேவிக்கு 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை 6 பாதாம் பருப்புடன் அரைத்துச் சேர்க்கவும். பக்கங்களில் எண்ணெய் பிரியும் வரை வைக்கவும். சூடாக இட்லி, தோசை, சப்பாத்தி, குல்சா, சாதத்தோடு பரிமாறவும்.