Author Topic: ~ மீன் குழம்பு ~  (Read 449 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மீன் குழம்பு ~
« on: April 24, 2016, 02:41:37 PM »
மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

மீன்  –  1 /2 கிலோ

வதக்கி அரைக்க

சின்ன வெங்காயம்  –  6
பெரிய தக்காளி  –  1

தாளிக்க

கடுகு  –  1 /2 தேக்கரண்டி
வெந்தயம்  –  1 /4 தேக்கரண்டி
வரமிளகாய்  –  2
கருவேப்பிலை  – சிறிது
சின்ன வெங்காயம்  –  5 ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி  –  1 (நீளமான துண்டுகளாக நறுக்கவும்)
தேங்காய்ப் பால்  – 1 /2  – 3 /4 கப்
மஞ்சள்தூள்  –  1 /4 தேக்கரண்டி
மசாலாதூள்  – 2  தேக்கரண்டி
புளி  –  சிறிய எலுமிச்சம்பழ அளவு
உப்பு  – தேவையான அளவு
எண்ணெய்  –  2 மேசைக்கரண்டி
 


செய்முறை

மீனை சுத்தம் செய்து 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை,வெந்தயம், வரமிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் புளி கரைசல், உப்பு மற்றும் 2  கப் தண்ணீர் ஊற்றி குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியானவுடன் தேங்காய் பால் ஊற்றி 3  – 4  நிமிடங்கள் கொதிக்க விடவும்.
வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை குழம்பில் சேர்த்து வேக விடவும்.
மீன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.