Author Topic: நாளை என்பது நம் கையில் இல்லை!  (Read 5247 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நாளை என்பது நம் கையில் இல்லை!


யார் மீதேனும் வருத்தமா
யாரோடேனும் சண்டையா
சரி செய்ய யாரும் இல்லையா?
நீங்களே முயலுங்கள்
உடன் சரி செய்ய!
இன்று அவரும் விரும்பலாம்
உங்களுடன் நட்பாயிருக்க
இன்றில்லையென்றால்
நாளை காலம் கடந்து போய் விடலாம்!

யாரையேனும் நேசிக்கிறீர்களா,
அவருக்கு அது தெரியாமலே?
உடனே சொல்லி விடுங்கள்
இன்று அவரும் உங்களை நேசிக்கலாம்
நாளை காலம் கடந்து விடக்கூடும்!

உங்களை மறந்து விட்டாரென்று எண்ணும்
நண்பர் மீது இன்னமும் நட்பா?
உடனே சொல்லி விடுங்கள்!
அவர் இன்னும் உங்கள் மீது
நட்புடன் இருக்கலாம்.
நாளை காலம் கை நழுவிப் போனதாகலாம்!

எவருடையதேனும் நட்புஅணைப்புக்கு ஏக்கமா?
இன்றே வேண்டும் எனக் கேட்டு விடுங்கள்.
கட்டிப்பிடி வைத்தியம்
அவருக்கும் தேவைப்படலாம்.
இன்று நீங்கள் கேட்கத் தவறினால்
நாளை காலம் கடந்து போயிருக்கலாம்!

உண்மையான நண்பர்களைப்
பாராட்டுகிறீர்களா?
இன்றே சொல்லி விடுங்கள்.
அவர்களும் உங்கள் நட்பைப்
பாராட்டக்கூடும்
இன்று அவர்கள் எங்கோ
விலகிச் சென்று விட்டால்
நாளை கால தாமதமாகி விடலாம்.

இறுதியாக
உங்கள் பெற்றோரை அதிகமாக நேசிக்கிறீர்களா?
இன்று வரை அதை வெளிக்காட்டியதில்லையா?
உடன் செயல் படுங்கள்.
இன்று அவர்கள் இருக்கிறார்கள் உங்களுடன்
உங்கள் அன்பை வெளிக்காட்ட நாளை ?


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்