Author Topic: ~ சோயா குழம்பு ~  (Read 369 times)

Offline MysteRy

~ சோயா குழம்பு ~
« on: April 23, 2016, 09:02:18 PM »
சோயா குழம்பு



முளைகட்டிய சோயா – ஒரு கப் (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
வெங்காயம் – ஒன்று (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
பூண்டு – 4 பல்
தக்காளி – ஒன்று
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
கடுகு, வெந்தயம், சீரகம் – தாளிக்க
புளி – தேவையான அளவு
எண்ணெய் – தாளிக்க
கொத்தமல்லி – சிறிதளவு
ஆல் பர்பஸ் பொடி – ஒரு தேக்கரண்டி

வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைக்கவும்.
சோயாவை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
அதில் அரைத்த வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
பின்பு வேக வைத்த சோயாவையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
மிளகாய் தூள் வாசம் போனதும், அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக ஆல் பர்பஸ் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். லேசாக அடிபிடிக்கும் அதனால் நன்கு கிளறவும்.
கெட்டியாக ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான முளைக்கட்டிய சோயா குழம்பு ரெடி. வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம். புலாவ், இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, ஊத்தப்பம் ஆகியவற்றுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.