Author Topic: ~ கணவாய் மசாலா! ~  (Read 391 times)

Online MysteRy

~ கணவாய் மசாலா! ~
« on: April 23, 2016, 08:39:51 PM »
கணவாய் மசாலா!



தேவையான பொருட்கள்

கணவாய் மீன் – அரை கிலோ
வெங்காயம் – 100கிராம்
தக்காளி -100கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1- 2டீஸ்பூன்
கரம் மசாலா – கால்ஸ்பூன்
சோம்புத்தூள் – கால்ஸ்பூன்
மிளகுத்தூள் – கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரைஸ்பூன்
சீரகத்தூள் – அரைடீஸ்பூன்
மல்லித்தூள் – 1டீஸ்பூன்
மல்லி, கருவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை

கணவாய் மீனை வாங்கி அதன் மேல் இருக்கும் மெல்லிய தோல் எடுத்து விடவும், செவுள் உடன் சேர்த்து இழுத்தால் இலகுவாக வந்துவிடும், உள்ளே இருக்கும் கழிவையும் எடுத்து விடவும். நன்கு அலசி எடுக்கவும். பின்பு அதனை வளையம் வளையமாக நற்க்கி கொள்ளவும். மஞ்சள் தூள் போட்டு அலசி எடுக்கவும்.வடிகட்டவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்,வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட். கரம் மசாலா போட்டு வதக்கவும். நறுக்கிய தக்காளி,மல்லி இலை சேர்த்து பிரட்டவும். மஞ்சள் கால் ஸ்பூன் சேர்த்து பிரட்டவும், மற்ற மசாலா வகைகளை சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும்.
சுத்தம் செய்த கணவாய் மீனை சேர்க்கவும். நன்கு பிரட்டி சிறிது உப்பு சேர்த்து, கருவேப்பிலை இரண்டு இணுக்கு சேர்க்கவும். குக்கரை மூடி 4விசில் வைக்கவும். உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.