Author Topic: ~ கத்தரிக்காய் பஜ்ஜி ~  (Read 331 times)

Offline MysteRy

~ கத்தரிக்காய் பஜ்ஜி ~
« on: April 18, 2016, 11:31:06 PM »
கத்தரிக்காய் பஜ்ஜி



தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
கருவடாம் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 6
கத்தரிக்காய் – 250 கிராம்
கறிவேப்பிலை – 10 இலை
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
புளி – எலுமிச்சை அளவு
கொத்தமல்லி – 1/2 கப்

செய்முறை :

வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். குக்கரில் கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வேகவைத்த கலவையை மத்து வைத்து மசித்து கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.
வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு, அதில் வேகவைத்தவற்றை ஊற்றவும்.
புளியை கெட்டியாக கரைத்து அதில் ஊற்றவும். கொதி வந்ததும் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.