Author Topic: ~ பருப்பு இட்லி ~  (Read 472 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226636
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பருப்பு இட்லி ~
« on: April 03, 2016, 09:30:14 PM »
பருப்பு இட்லி



புழுங்கல் அரிசி – 2 கப்
துவரம் பருப்பு – அரை கப்
கடலைப்பருப்பு – அரை கப்
உளுந்தம் பருப்பு – அரை கப்
பாசிப்பருப்பு – அரை கப்
வெந்தயம் – 2 மேசைக்கரண்டி
தயிர் – சிறிது
உப்பு – தேவையான அளவு

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசி மற்றும் பருப்பு வகைகளை (தனித்தனியாக) ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயத்தை உளுந்துடன் சேர்த்து ஊற வைக்கவும்.
அனைத்தும் ஊறியதும் தனித்தனியாக அரைத்தெடுத்து, ஒன்றாகச் சேர்த்து உப்பு மற்றும் தயிர் சேர்த்து பதமாகக் கலந்து வைக்கவும்.
இட்லி தட்டில் (குக்கர் இட்லி தட்டு) சிறிது எண்ணெய் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி, 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான, சத்தான பருப்பு இட்லி தயார். புதினா சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.