Author Topic: ~ மலாய் சிக்கன் ~  (Read 319 times)

Online MysteRy

~ மலாய் சிக்கன் ~
« on: April 03, 2016, 08:56:53 PM »
மலாய் சிக்கன்



சிக்கன் – 2 கிலோ
தக்காளி – கால் கிலோ + 2
பெரிய வெங்காயம் – கால் கிலோ + 1
சோம்பு – ஒரு தேக்கரண்டி + ஒரு மேசைக்கரண்டி
உப்பு – 3 மேசைக்கரண்டி
புதினா – ஒரு கொத்து
கொத்தமல்லி – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 10
இஞ்சி – 100 கிராம்
பூண்டு – 100 கிராம்
மிளகு – ஒரு மேசைக்கரண்டி
சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 5
தேங்காய் – ஒன்று
மிளகாய் தூள் – அரை கப்
அஜினோமோட்டோ – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் – அரை கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் – 5

தக்காளி கால் கிலோ, வெங்காயம் கால் கிலோ, பச்சை மிளகாய் 5 இவையனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி, மிக்ஸியில் இட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்.
மிளகு ஒரு மேசைக்கரண்டி, சீரகம் ஒரு மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, சோம்பு ஒரு மேசைக்கரண்டி இவை அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சிக்கன் துண்டங்களை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் ஒன்று, தக்காளி ஒன்று இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி, சிக்கனை துண்டங்களைப் போட்டு அதனுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகு, சீரகம் விழுது சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு வேகவிடவும்.
சுமார் 2 நிமிடங்கள் கழித்து மிளகாய் தூள் போட்டு கலக்கிவிடவும். அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி, பாத்திரத்தை மூடி வைத்து சுமார் 15 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் திறந்து அஜினோமோட்டோ சேர்க்கவும். மேலும் 5 நிமிடங்கள் திறந்த நிலையில் வேகவிடவும். பிறகு தேங்காய் விழுது, தக்காளி சாஸ் சேர்த்து, கொத்தமல்லி தழையையும் தூவி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு 2 பட்டை, 2 கிராம்பு, அன்னாசி பூ, 5 ஏலக்காய், சோம்பு ஒரு தேக்கரண்டி மற்றும் சிறிது புதினா போட்டு தாளிக்கவும்.
பிறகு பச்சை மிளகாய் 5, நறுக்கின வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய 2 தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி குழம்பில் ஊற்றவும்.
குழம்பினை மேலும் நான்கு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை சிறிது தூவி அலங்கரிக்கவும்.
எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்யப்படுவதே இந்த மலாய் சிக்கனின் சிறப்பாகும். இது ஒரு மலேசியன் உணவு.