Author Topic: ~ மசாலா கடலை ~  (Read 387 times)

Offline MysteRy

~ மசாலா கடலை ~
« on: April 02, 2016, 09:13:03 PM »
மசாலா கடலை



பச்சை கடலை – அரை கிலோ
கடலை மாவு – அரை கப்
அரிசி மாவு – கால் கப்
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – சிறிது
பூண்டு – 6 பற்கள்
எண்ணெய் – ஒரு கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து

கடலையில் பூச்சிக்கடலை இல்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
பூண்டை தட்டி வைக்கவும். மாவு கலவையை நன்றாக சேர்த்து கலந்து வைக்கவும். கடலையில் லேசாக தண்ணீர் தெளித்து வைக்கவும். (தண்ணீரை கையால் தெளிக்கனும் ஊற்ற கூடாது கடலை முழுவதும் படும் படி தெளித்தால் போதும்)
ஈரம் செய்த கடலையில் தட்டி வைத்த பூண்டு சேர்த்து மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும். கடலை முழுவதும் மாவு ஒட்டும் படி பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலையை போட்டு நன்கு வறுப்பட்டதும் எடுக்கவும்.
கடைசியாக கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து சேர்க்கவும். சுவையான மொறு மொறு மசாலா கடலை ரெடி.