Author Topic: ~ ஆரோக்கியமான வழியில் குழந்தை பிறந்த பின் உங்கள் எடையை குறைப்பது எப்படி: ~  (Read 415 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆரோக்கியமான வழியில் குழந்தை பிறந்த பின் உங்கள் எடையை குறைப்பது எப்படி:



அம்மா ஆகும் போது ஒரு பெண்ணின் உடலில் பெரிய மாற்றம் நிகழ்கிறது. ஹார்மோன் மாற்றங்களினால் எடை கூடுவது இயல்பு, மேலும் உடலில் பல மாற்றங்களையும் எதிர் கொள்கிறாள்.
புதிய தாய்மார்கள் எதிர்கொள்ளும் கடினமான விஷயங்களில் ஒன்று குழந்தை பிறந்த பின் உங்கள் எடையை குறைப்பதுதான். ஒரு பிறந்த குழந்தையை வளர்ப்பது என்பது சவாலான விஷயம்தான், குழந்தையை கையாளுவதில் மட்டும் இல்லாமல் – நீங்கள் அவர்களின் தூக்கம் மற்றும் உணவு நடைமுறைகள் இவற்றை சரியான முறையில் முதலில் சரி செய்ய வேண்டும், இதற்குஉங்கள் கணவரும் ஒத்துழைக்க வேண்டும். இங்கே குழந்தை பிறந்த பின் உங்கள் எடையை குறைக்க சில பயனுள்ள வழிகள் உள்ளன …
– முதல் சில மாதங்களில் உங்கள் குழந்தை பெரும்பாலும் தூங்கிக் கொண்டேதான் இருக்கும் (அதாவது முதல் நான்கு மாதங்கள் கடந்து சொல்லும் வரை). இதகு அப்புறம் குழந்தை ஒரு நிலையில் இருக்க ஒருவாறு பழகி கொள்ளும்(அதிகமாக அல்லது குறைவாக), இந்த சமயத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்ய மெதுவாக ஆரம்பிக்கலாம். யோகா 45 நிமிடங்கள், 20 அல்லது 30 நிமிடங்கள் டிரெட்மில்லில் அல்லது உங்கள் வீட்டைச் சுற்றி ஒரு விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் உடம்பு ஒத்துழைப்பதை நீங்க‌ள் செய்ய (குற்ற உணர்ச்சி இல்லாமல்) சில நேரம் அனுமதிக்கலாம். இந்த வழியில் நீங்கள் உடற்பயிற்சி செய்வதின் மூலம் எதையும் தவிர்க்காமல் லட்சியம் போல தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் எடை குறையும்.

– உங்கள் உடல் உங்களுக்கு ஒரு பெரிய சவால் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அற்புதம் உடனே நடந்து விடாது, எடை குறைவது மிகவும் மெதுவாகத்தான் நடக்கும், எவ்வளவு செய்தும் எடை குறையவில்லையே என்று மனதை தளர விட வேண்டாம், {விஜய்தமிழ்.net ஸ்பெஷல்}எடை குறைவதற்கு சில காலம் ஆகும். அதுவரை உங்களுக்கு பொறுமை அவசியம். உங்களுடையது இயற்கை பிரசவம் என்றால், நீங்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகு உடற்பயிற்சியை தொடங்க முடியும். இதே உங்களுக்கு அறுவை சிகிச்சை என்றால், நீங்கள் குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்கள் உங்கள் உடல் குணமடைய காத்திருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
– முதலில் மெதுவாக ஆரம்பிக்கவும். எடையை சீக்கிரம் குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு குதிப்பது போன்ற‌ கடுமையான உடற்பயிற்சிகளை கண்மூடித்தனமான செய்ய‌ வேண்டாம். முதலில் உங்கள் உடல் ஒத்துழைக்கும் சில உடற்பயிற்சி செய்ய பழகவும்., நாளடைவில் இது உங்களுக்கு பழகி விடும். இதன் பிறகு படிப்படியாக நீங்கள் வேறு சில உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு உங்கள் எடையை குறைக்கலாம்.
– சில நேரங்களில் நடபயிற்சிக்காக‌ ஒரு தள்ளுவண்டியில் உங்கள் குழந்தை வைத்து தள்ளிக் கொண்டு மெதுவாக நடக்கலாம் துவக்க நிலையில், இதற்கு பின் படிப்படியாக உங்கள் வேகத்தை அதிகரிக்கலாம்.
– பிரசவத்திற்கு பிறகு இடுப்பு பயிற்சிகள் செய்ய ஒருபோதும்{விஜய்தமிழ்.net ஸ்பெஷல்} மறக்க வேண்டாம்.
– தாய்ப்பால் எடை இழக்க உதவும் ஒரு சிறந்த வழி. ஆனல் அதே சமயம் நீங்கள் ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவை சாப்பிடுவதை மறக்க கூடாது.