Author Topic: ~ மிதி பாகற்காய் தேங்காய்ப்பால் கூட்டு ~  (Read 358 times)

Offline MysteRy

மிதி பாகற்காய் தேங்காய்ப்பால் கூட்டு



தேவையானவை;

மிதி பாகற்காய் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 7
காய்ந்த மிளகாய் – 2
கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப்.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:

பாகற்காயையும் வெங்காயத்தையும் ஒரே மாதிரி அளவில் நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பாகற்காயைச் சேர்த்து, தீயைக் குறைத்துவைத்து மூடி, நன்கு வேகும் வரை வதக்கவும். வெந்ததும், தேங்காய்ப்பால் விட்டு, உப்பு சேர்த்து தீயை அதிகரிக்க வேண்டும். நன்றாகக் கொதித்து வற்றிவரும்போது, தளதளவென இருக்கும் பக்குவத்தில் இறக்க வேண்டும்.
குறிப்பு: தேங்காய்ப்பால் சுண்டி இருக்க வேண்டும். பாகற்காயும் நன்கு வெந்திருக்க வேண்டும். அப்போதுதான் கசப்புச்சுவை இல்லாமல் கூட்டு சுவையாக இருக்கும்.
பலன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஊட்ட உணவு. வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புண்களை நீக்கும். உடல் பருமனைக் குறைக்கும். ரத்தத்தில் வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் நச்சுக்களை வேகமாக நீக்குவதன் மூலமாக, வயோதிகத் தோற்றத்தினை நீக்கும். தோல் மற்றும் கூந்தல் பளபளப்பு உண்டாகும். கண்பார்வையில் தெளிவு உண்டாகும்.