Author Topic: ~ அரைக்கீரை குழம்பு ~  (Read 528 times)

Offline MysteRy

~ அரைக்கீரை குழம்பு ~
« on: March 26, 2016, 09:27:18 PM »
அரைக்கீரை குழம்பு



தேவையானவை:

அரைக்கீரை – ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து, கழுவி நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – 3, பூண்டு – 5 பல், நாட்டுத் தக்காளி – 4, சின்ன வெங்காயம் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்க வும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். குக்கரில் கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி யைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்து மத்தினால் நன்றாகக் கடையவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு, பொரிந்ததும் கீரைக் கலவையில் சேர்த்துக் கடையவும்.