Author Topic: ~ கத்திரிக்காய் சட்னி ~  (Read 303 times)

Online MysteRy

~ கத்திரிக்காய் சட்னி ~
« on: March 25, 2016, 11:38:50 PM »
கத்திரிக்காய் சட்னி



தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் – 4
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
புளி – நெல்லிக்காயளவு
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்றவாறு

செய்முறை:

* வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* கத்திரிக்காயைக் கழுவி துடைத்து, அதன் மேல் சிறிது எண்ணெய்த் தடவி, இடுக்கியால் பிடித்துக் கொண்டு அடுப்பு தீயின் மேல் காட்டி சுட்டெடுக்கவும்.
 
* வெந்த கத்திரிக்காயின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து விடவும். அல்லது மிக்ஸியில் தேங்காயுடன் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
 
* புளியை தண்ணீரில் ஊறவைத்து, 1 டீஸ்பூன் திக்கான புளிச்சாறு எடுக்கவும். .
 
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
 
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் விழுது, தேங்காய், புளி ஆகியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து தளர விடவும்.
 
* மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
 
* இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.