Author Topic: ~ வறுத்த குண்டூர் சிக்கன் கிரேவி ~  (Read 315 times)

Offline MysteRy

வறுத்த குண்டூர் சிக்கன் கிரேவி



தேவையானபொருள்கள்

சிக்கன் – 500 கிராம்
வத்தல் மிளகாய் – 5
கடுகு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – கொஞ்சம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 தேக்கரண்டி
ஏலக்காய் பட்டை கிராம்பு கலவை – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
புளிக்காத தயிர் – 2 தேக்கரண்டி
மல்லித் தளை – சிறிது

செய்முறை

*சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி நீர் இல்லாமல் எடுத்து வைக்க வேண்டும்.
* காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பு நிறம் வரும்வரை வறுத்து எடுக்க வேண்டும்.
*ஆறியவுடன் பொடி செய்து, பின்பு அத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ள வேண்டும்.
*ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கி மணம் வந்தவுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
*வதங்கியதும் அரைத்த மசாலா, தயிர் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு சிக்கனை சேர்த்து, பிரட்டி விட வேண்டும்.
*சிறிது கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வேக விட வேண்டும். அடிக்கடி பிரட்டி விட வேண்டும்.
*எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும். சிக்கன் வெந்தபின்பு மல்லி இலை தூவ வேண்டும்.
* இப்போது சுவையான வறுத்த குண்டூர் சிக்கன் கிரேவி ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!