Author Topic: ~ உப்பலடை ~  (Read 415 times)

Online MysteRy

~ உப்பலடை ~
« on: March 20, 2016, 09:22:46 PM »
உப்பலடை



தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 100கிராம்
துவரம் பருப்பு – 100கிராம்
கோதுமை ரவை – 3ஸ்பூன்
ரவை – 1 கப்
மிளகாய் வத்தல் – 3
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
கருவேப்பிலை – சிறிது
பெருங்காயம் -சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணைய் -பொரிக்க
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

பருப்புகளை,கோதுமை ரவை,மிளகாய் வத்தலுடன் சேர்த்து ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.கொரகொரப்பாக அரைத்து ரவை கலந்து,உப்பு,நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை எல்லாம் சேர்த்து கரண்டியில் அள்ள
வரும் அளவுக்கு நீர் ஊற்றி கலந்து வைக்கவும்.சிறிது நேரம் கழித்து எண்ணையை காயவைத்து சிறு கரண்டியில் எடுத்து ஊற்றவும்.வடை போல்
பொரித்து எடுக்கவும்.உப்பலடைக்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி,கார சட்னி