Author Topic: ~ உடல் எடையை குறைக்கும் பார்லி சூப்!! ~  (Read 475 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உடல் எடையை குறைக்கும் பார்லி சூப்!!



தேவையான பொருட்கள்

வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பூண்டு – 4 பற்கள்
கேரட் – ஒன்று
பச்சமிளகாய் – 2
முட்டை – 2
எலுமிச்சம் பழம் – 1
பார்லி – 1௦௦ கிராம்
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – ஒரு சிட்டிகை
கொத்தமல்லித் தழை – சிறிதளவு

செய்முறை

கேரட்டைத் துருவி வைக்கவும். வெங்காயம், பச்சமிளகாய், பூண்டு மற்றும் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், பச்சமிளகாய், கேரட் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும். வதங்கியதும் பார்லி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
அனைத்தும் வெந்ததும் இதனுடன் முட்டை வெள்ளைக்கருவை மட்டும் சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். முட்டை திரித்திரியாக வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் எலுமிச்சம் பழசாற்றை சேருங்கள். இப்போது சுவையான பார்லி சூப் தயார்.