Author Topic: ~ பட்டர்பீன்ஸ் பொரியல் ~  (Read 390 times)

Offline MysteRy

பட்டர்பீன்ஸ் பொரியல்



தேவையானவை:

பட்டர் பீன்ஸ் – 1 கப்,
வெங்காயம் – ஒன்று,
முந்திரி – 5,
கசகசா, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை, லவங்கம் – தலா ஒன்று,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான  தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் தூவி மூடி இரண்டு விசில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
• தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது  இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
• இது சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.