Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரியுமா??
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரியுமா?? (Read 970 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226727
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரியுமா??
«
on:
March 19, 2016, 05:49:37 PM »
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரியுமா??
குழந்தையாக இருக்கும் போது நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள உங்கள் தந்தை வலியுறுத்தி இருப்பார். அதுவும் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருந்தால் அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதனால் என்ன வந்து விட போகிறது என பல பெண்கள் கேட்டு கொள்கின்றனர்.
ஆனால் இதனை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான சான்றையும் காரணங்களையும் பல பெண்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
பொட்டுக்கள் பொதுவாக நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும். சிலர் அதனை சற்று மேல் உயர்த்தி வைக்க விரும்புவார்கள். ஆனால் அதற்கான தாக்கம் மாற போவதில்லை. சரி வைக்கும் இடம் ஏன் முக்கியம்? இதோ, அதற்கான காரணம்:
விழிப்புணர்வு மற்றும் ஒருமுகப்படுத்தலின் மையம்
நம் நெற்றியில், இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தான் நம் உடலில் உள்ள முக்கிய நரம்புகள் சந்திக்கின்றன. இது போக இந்த புள்ளி ஆறாம் நிலையாக கருதப்படும் முக்கியமான சக்கரமாகும். 'அஜ்னா சக்கரம்' என அழைப்படும் இந்த சக்கரம் தான் விழிப்புணர்வு புள்ளியை குறிப்பிடும். மேலும் இது மூன்றாவது கண்ணின் நிலையை குறிக்கும்.
இந்த புள்ளி ஊக்கவிக்கப்படும் போது, ஒருவருக்கு பல வழிகளில் அது உதவிடும். மனதை அமைதியாக்குதல், பதற்றத்தை குறைத்தல் போன்றவைகள் அதில் சில. மேலும் ஒருவருக்கு இரண்டு கண்களால் பார்க்க முடியாத சில விஷயங்களை இந்த புள்ளியின் மூலமாக பார்க்க உதவும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்தநாள் கிடைக்கும் அனைத்து ஆன்மீக பயன்களை தவிர இதில் பல உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது.
தலைவலியை நீக்கும்
அக்குப்பிரஷர் நெறிமுறைகள் படி, உடலில் உள்ள இந்த புள்ளி மூலம் தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்குமாம். காரணம் இந்த புள்ளியின் மூலம் நரம்புகள் மற்றும் இரத்த குழாய்களின் குவிதல் உடனடியாக அமைதியுறும். தலைவலியை நீக்க இயற்கையான சிகிச்சைகளும் உள்ளது.
சைனஸ் பிரச்சனையை நீக்கும்
பொட்டு வைக்கும் போது நெற்றிப்புள்ளியை அழுத்தும் போது, மூக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு செல்லும் முக்கிளை நரம்பின் (முகத்திற்கு செல்லும் நரம்பியல்கள்) ஒரு குறிப்பிட்ட கிளை (முதுகெலும்பு நரம்பு, நெற்றிப் பொட்டுகள் சம்பந்தப்பட்ட மற்றும் அக்குள் நரம்பு) ஊக்குவிக்கப்படும்.
இந்த புள்ளியை ஊக்குவிக்கும் போது, இந்த நரம்புகள் ஊக்குவிக்கப்பட்டு, மூக்கின் துவாரகம், மூக்கின் சளி பாதை மற்றும் சைனஸ் போன்ற இடங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மூக்கடைப்பு நீங்கி, சைனஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கம் வற்றி, நாசி அடைப்பு மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சைனஸை
முக வாதத்திற்கான நிவாரணி
இந்த புள்ளியில் மசாஜ் செய்தால் முகத்தில் வாதம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். இந்த புள்ளியில் மசாஜ் செய்வதால் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் மூக்குக்கூம்பகத்தசை ஊக்குவிக்கப்படும்.
நெற்றிப் பொட்டுகள் சம்பந்தப்பட்ட கிளை நரம்புகளில் உள்ள க்ரானியல் மசில் ஃபைபர் (CNVII) இந்த தசைகளை ஊக்குவிக்கும். முகத்தின் வாதத்திற்கு CNVII முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் முகத்தின் அனைத்து தசை அசைவுக்கும் இதுவே பொறுப்பாகும்.
இந்த புள்ளியில் மசாஜ் செய்யப்படுவது ஆயுர்வேதத்தில் உள்ள பஞ்சகர்மா கிளையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு 'ஷிரோதாரா' என்பதே பெயராகும்.
இந்த சிகிச்சையில் மருத்துவ எண்ணெய் தொடர்ச்சியாக நெற்றிப்பொட்டில் ஊற்றப்படும். இதனை 40-60 நிமிடங்கள் வரை ஊற்ற வேண்டும். முக நரம்புகளை இது மிகவும் ஆழமாக ஊக்குவிக்கும். இதனால் முக வாதத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
புருவங்களுக்கு நடுவே உள்ள லேசான கோடுகள் குறையும்
புருவங்களுக்கு நடுவே உள்ள லேசான கோடுகள் பல பேர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். இந்த கோடுகளை நீக்க வேண்டுமானால், உங்கள் புருவங்களுக்கு மத்தியில் உள்ள புள்ளியை தினமும் ஒரு முறை மசாஜ் செய்யுங்கள்.
இந்த இடத்தில் தான் மூக்குக்கூம்பகத்தசை உள்ளது. இந்த இடத்தை மசாஜ் செய்வதால் தசைகள் திடமாவதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அந்த பகுதியில் உள்ள சரும பகுதிகளை நரம்புகள் ஊக்கவிக்கும். இதனால் அவ்வகை கோடுகள் மறையத் தொடங்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரியுமா??