Author Topic: வாக்கு வாதம்....  (Read 525 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
வாக்கு வாதம்....
« on: March 10, 2016, 08:35:23 PM »
கடவுளுக்கும்
எனக்குமொரு
வாக்கு வாதம்....
உறக்கமற்ற இரவு தந்த
நீ
இரக்கமற்றவன் என்கிறேன்...
நீ
என்னை நினைக்கவில்லை
என்கிறான்
ஜெபிக்கவேண்டிய அவசியம்
எனக்கில்லை
சபிக்கவேண்டிய அவசியம்
உனக்கென்ன
என்கிறேன்
எது
சாபமென்கிறான்
உறக்கமற்ற இரவுகள்
சாபமில்லையோவென்ற கேள்விக்கு
கனவுகளற்ற
உறக்கம் தருகிறேன்
வரமென்று சொல்வாயோ
என்கிறான்
உறக்கமற்ற இரவில்
கனவுகளேனும் விரவியிருக்கிறது
கனவுகளற்ற உறக்கத்தில்
பிணமன்றோ நான் ....
உறக்கம் தந்தால்
கனவுகள் பறிப்பதுன்
சட்டமோ என்கிறேன்
இரவு தந்தால்
உறக்கம் தருவதென்
நிர்பந்தமோ என்கிறான்
சன்னமாய் நெளிந்து
கண்கள் கசக்குகிறேன்
கசங்கும் கண்களுக்கே
கனவுகள் சொந்தம் என்கிறான்
வெளிச்சக்கீற்றொன்றின்
ஸ்பரிசத்தில் கலைகிறது
இக்கனவு....
ஜன்னல் வழியே
வீசியெறியப்பட்ட
நாளி�தழ் வழியே
விரிகிறது
வீசிய சிறுவனின் கனவு
சார் என்ற விளியோடு
வைக்கப்பட்ட
இந்த
தேநீரில் மிதக்கிறது
தேக்கி வைக்கப்பட்ட
இச்சிறுவனின் கனவு
ஒரு
போதி ஞானம்
பிறக்கிறது எனக்கு
ஒரு
பாதி ஞானம்
புரிகிறது எனக்கு
காசு சேர்ப்பது
கனவாயிருக்கலாம்
கனவு சேர்ப்பது
காசாயிருக்குமா...?
கன�வு தொலைத்து
காசு சேர்ப்பவனுக்கு
உறக்கம் கேட்க
அருகதை என்ன இருக்கிறது
செத்துப்போன
யாசகர்களில் எவரேனும்
உயிர் யாசித்ததுண்டோ....?
வினாக்களற்ற உலகும்
கனாக்களற்ற இரவும்
சாபமென்றறிகிறேன்....
உறக்கமற்ற இரவுகளும்
விடைகளற்ற வினாக்களும் கூட
வரமென்றறிகிறேன்
சரி
கடவுளோடு பேசும் கனவு
மறுபடியுமொருமுறை வரலாம்
வசைவுக்கும்
இசைவுக்கும் நடுவிருக்குமொன்றை
சொல்லி விடலாம் அவனுக்கு ....!
Palm Springs commercial photography