Author Topic: ~ பூண்டு பொடி ~  (Read 363 times)

Offline MysteRy

~ பூண்டு பொடி ~
« on: March 10, 2016, 01:42:46 PM »
பூண்டு பொடி



பூண்டு – 15 பல்
உளுந்து – அரை கப்
கடலைப்பருப்பு – அரை கப்
வெள்ளை எள் – கால் கப்
காய்ந்த மிளகாய் – 15
பெருங்காய தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி

முதலில் பூண்டை துருவியில் மெலிதாக துருவி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் பெருங்காயத்தூள், உப்பு தவிர்த்து ஒவ்வொரு பொருளாக சேர்த்து பொன் நிறமாக வறுக்க வேண்டும். தனித்தனியே வறுத்து எடுத்த பொருள்களை ஆறவைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒவ்வொன்றாக மிக்ஸியில் போட்டு தனித்தனியே அரைத்து எடுத்து ஆறவைக்கவும்.
அரைத்தப் பொருட்களுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
சுவையான பூண்டு பொடி தயார். இந்த பொடியை காற்று புகாத பாட்டிலில் வைத்து உபயோகப்படுத்தலாம். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்கள்.