Author Topic: ~ சூரிய கிரகண நிகழ்வால் இருளில் மூழ்கிய இந்தோனேசியா : ஆபூர்வ காணொளி ~  (Read 1103 times)

Offline MysteRy

சூரிய கிரகண நிகழ்வால் இருளில் மூழ்கிய இந்தோனேசியா : ஆபூர்வ காணொளி



சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. கிரகணமானது சூரியனை விழுங்குவதுபோல் தோற்றமளிக்கும் இந்த சூரிய கிரகணம் இன்று காலை 6.20 மணி முதல் 6.50 வரை ஏற்பட்டது.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவில் அவ்வளவு தெளிவாக பார்க்க இயலவில்லை. இருப்பினும், ஆசியா, ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள நாடுகளில் இன்றைய சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது.

குறிப்பாக, இந்தோனேசியா மற்றும் பசிபிக் நாடுகளில் முழுமையாக ஏற்பட்டது. இதனால் பகல்நேரம் இருட்டாக மாறியது. இந்தோனேசியாவில் பைலிடங் மாகாணத்தில் முழுசூரிய கிரகணமும் மிகத்தெளிவாக தெரிந்தது. அங்குள்ள ஆலிவியர் கடற்கரையில் திரளாக கூடிநின்று சூரிய கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
உள்நாட்டு ஊடகங்கள் அந்தக் காட்சியை ஆரம்பம் முதல் இறுதிவரை ‘லைவ்’ ஆக ஒளிபரப்பின. அந்தக் காட்சியின் மூலப்பதிவு உங்கள் ‘மாலைமலர் டாட்காம்’ வாசர்களின் பார்வைக்கு வீடியோவாக