Author Topic: ~ கேரட் சாலட் தமிழ் சமையல் குறிப்பு ~  (Read 332 times)

Offline MysteRy

கேரட் சாலட் தமிழ் சமையல் குறிப்பு



தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ….

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் – 1 கிலோ
முளைக்கட்டிய பச்சைப்பயறு – 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
எலுமிச்சம்பழம் – 1
நறுக்கிய குடை மிளகாய் – 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கட்டு
உப்பு, மிளகுப்பொடி – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.
* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி!