Author Topic: ~ ஈஸி கோபி மஞ்சுரியன் ~  (Read 329 times)

Offline MysteRy

~ ஈஸி கோபி மஞ்சுரியன் ~
« on: March 05, 2016, 08:56:25 PM »
ஈஸி கோபி மஞ்சுரியன்



காலிஃப்ளவர் – ஒன்று (பெரியது)
வெங்காயம் – ஒன்று
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் காலிஃபிளவரை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
சற்று பெரிய கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளைப் போடவும்.
2 நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் 5 நிமிடம் வேகவிடவும்.
அதன் பின் அத்துடன் தக்காளி சாஸை சேர்க்கவும்.
சாஸ் காலிஃப்ளவருடன் நன்றாக சேருமாறு கலந்துவிட்டு வேகவிடவும்.
இப்பொழுது வெங்காயத்தை நான்கு பாகமாக வெட்டிக் கொள்ளவும். அதன் பின் வெட்டிய வெங்காயத்தின் இதழ்களைத் தனித்தனியாக பிரித்துக் கொள்ளவும்.
பிரித்து வைத்துள்ள வெங்காயத்தை ஒரு சிறிய கடாயில் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றி வதக்கவும்.
ஒரு நிமிடம் வதங்கிய பிறகு அதை காலிஃப்ளவர் கலவையுடன் சேர்க்கவும்.
அதன்பின்பு அனைத்தையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். பின்னர் கொத்தமல்லி தூவவும்
இப்பொழுது சுவையான ஈஸி கோபி மஞ்சுரியன் ரெடி.