Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நெருஞ்சி மூலிகை-மருத்துவம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நெருஞ்சி மூலிகை-மருத்துவம் ~ (Read 325 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226728
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நெருஞ்சி மூலிகை-மருத்துவம் ~
«
on:
March 06, 2016, 09:35:51 AM »
நெருஞ்சி மூலிகை-மருத்துவம்
சிறிய தாவரமாக இருந்தாலும் அறிய மருத்துவ குணங்கள் கொண்ட நெருஞ்சியை பற்றி இங்கே பார்ப்போம்.
நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.
நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து 1/2 லிட்டர் நீரிலிட்டு பகுதியாக காய்ச்சி 60மில்லி அளவு உட்கொண்டுவர பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கி குழந்தைப்பேரு ஏற்படும்.
நெருஞ்சி வேரையும், காயையும் பச்சரிசியுடன் சேர்த்து வேகவைத்து அதை வடிகட்டிய கஞ்சியுடன் சர்க்கரை சேர்த்து குடித்துவர நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், உடல் சூடு ஆகியவை தணியும்.
நெருஞ்சி முள்ளைமட்டும் சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.
நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.
சிதைத்த நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
சிறுநீர் பாதையில் எரிச்சலோ, வலியோ காணப்பட்டால் நெருஞ்சி சமூலத்துடன் (முழுச்செடி) நித்யகல்யாணி பூ சம எடை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்துவர அந்த பாதிப்பு குணமாகும்.
நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.
நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூபடையாத பெண்கள் பூபெய்துவர்.
நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் தணியும்.
நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.
நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும்.
முழு நெருஞ்சிச்செடி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளை இவை மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கல் அடைப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. நெருஞ்சி முள் ஆண்மையை பெருக்கும் சக்தி கொண்டது. இதன் இலை சிறுநீரை பெருகச்செய்வதுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் உண்டாக்கும்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நெருஞ்சி மூலிகை-மருத்துவம் ~