Author Topic: ~ மீன் கட்லட் ~  (Read 321 times)

Offline MysteRy

~ மீன் கட்லட் ~
« on: March 05, 2016, 06:14:50 PM »
மீன் கட்லட்



டின் மீன் – 1 (425g)(mackerel fish நல்லது)
உருளைக்கிழங்கு – 250-300 கிராம்
தக்காளி – 50 கிராம்
காரட் – ஒன்று
வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – இரண்டு
கறித்தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
எலுமிச்சை – பாதி
கறிவேப்பிலை – 2 இணுக்கு
முட்டை – 2
பிரெட் கிரெம்ஸ் பவுடர் – 100கிராம் (golden breadcrumbs நல்லது)
எண்ணெய் – பொரிப்பதற்கு

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
டின் மீனை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும், உருளைக்கிழங்கை ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு அவித்து எடுத்து, தோல் உரித்து உதிர்த்துக்கொள்ளவும். காரட்டை துருவிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலையை பொடியாக அரிந்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, மீன், ஒரு தேக்கரண்டி உப்பு, கறித்தூள், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு குறைந்த தீயில் வதக்கவும்.
சிறிது வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் காரட் போட்டு பிரட்டவும்.
பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, கரம் மசாலா தூள் போட்டுப் பிரட்டி இறக்கி வைத்து அதில் எலுமிச்சை/தேசிக்காய் பிழிந்துவிட்டுப் பிரட்டவும். அதிகநேரம் அடுப்பில் வைக்கத் தேவையில்லை. பச்சை மணம் போக வாட்டினால் போதும்.
பின்னர் இவற்றை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் தட்டிக்கொள்ளவும்.
இப்போது முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மிளகுதூள் போட்டு மெதுவாக அடித்து கலக்கவும். அதில் தட்டிய உருண்டைகளைப் பிரட்டி, பின் பிரெட் கிரெம்ஸ்சில் பிரட்டி எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் கட்லெட்களை போட்டு, குறைந்த நெருப்பில் வேகவைத்து, மெதுவாகத் திருப்பி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இதோ சுவையான மீன் கட்லட் தயார்.