Author Topic: ~ சிக்கன் க்ரேவி ~  (Read 337 times)

Offline MysteRy

~ சிக்கன் க்ரேவி ~
« on: March 05, 2016, 06:13:27 PM »
சிக்கன் க்ரேவி



கோழித் துண்டுகள் – 1/2 கிலோ
வெங்காயம் பெரியது – ஒன்று
ஏலம் – 6
கருவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – இரண்டே கால் மேசைக்கரண்டி
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
ரம்பை இலை – சிறியது ஒன்று
கருவா – 1 சிறிய துண்டு
கிராம்பு – 3 அல்லது 4
தக்காளி பெரியது – 3
தேங்காய் சிறியது – பாதி மூடி
கசகசா, முந்திரி பேஸ்ட் – ஒரு 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தேங்காய் எண்ணெய் – 2 அகப்பை(ஒரு சிறிய குழி அகப்பை அளவு)
நெய் – 2 அகப்பை
மசாலா பவுடர் – 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்(காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி

தக்காளியை சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். கோழி இறைச்சியை சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ரம்பையை கழுவி மூன்றாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய், கருவா, கிராம்பு இவையனைத்தையும் ஒரு கிண்ணத்தில் ஒன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் விடவும். பின்னர் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அது பொன்னிறமானதும் கருவேப்பிலை, ரம்பை இலை போட்டு லேசா வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு, கருவா, தயிர், ஏலக்காய், கிராம்பு எல்லாம் சேர்த்து கலந்து வைத்துள்ளதை இதில் சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு கலவை பச்சை வாடை நீங்கியதும் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் கோழிக் கறியை சேர்த்து இலேசாக பிரட்டிவிட்டு தீயை சிம்மில் வைத்து ஒரு 5 நிமிடம் வேக விடவும்.
கோழி இறைச்சி வெந்தவுடன் மசாலா பவுடரை அதனுடன் சேர்த்து பிரட்டவும். எடுத்து வைத்து இருக்கும் தேங்காய் பாலையும் அதில் ஊற்றவும்.
நன்கு கொதித்து வந்ததும் சிம்மில் வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.
ஓரளவு வெந்ததும் அரைத்து வைத்துள்ள கசகசா, முந்திரி கலவையை கொட்டவும். தீயை அதிக அளவில் வைக்க கூடாது. அப்படியே வேக விடவும்.
நன்கு வெந்ததும் எண்ணெய் வெளியே மிதக்கும். அந்த பதம் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூடான, சுவையான சிக்கன் கிரேவி ரெடி. இதனை சாதம், நெய்சோற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். புரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், இட்லி, தோசை அனைத்துடனும் சாப்பிடலாம்.