Author Topic: ~ பிரெட் மசால்  (Read 321 times)

Offline MysteRy

~ பிரெட் மசால்
« on: March 05, 2016, 06:12:05 PM »
பிரெட் மசால்



பிரெட் – 10 ஸ்லைஸ்
பெரிய வெங்காயம் – 2
காரட் – ஒன்று
தக்காளி – ஒன்று
பீன்ஸ் – 5
பச்சை மிளகாய் – 6
மிளகாய் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – கால் கப்

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும், காரட்டையும் சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 4 நிமிடம் நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், பிறகு அதில் பொடியாக நறுக்கின காரட், பீன்ஸ் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
3 நிமிடம் கழித்து காய்கள் சற்று வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், உப்பு போட்டு நன்கு மிளகாய் தூள் வாசனை போகும் வரை பிரட்டி விடவும்.
மிளகாய் வாசனை போனதும், அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறி 5 நிமிடம் மூடி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து மூடியை திறந்து காய்கள் வெந்ததும் அதில் நறுக்கின சிறு சிறு பிரெட் துண்டுகளை போடவும்.
பிறகு பிரெட் துண்டுகள் மசாலாவில் ஒன்றாக சேரும் படி 3 நிமிடம் நன்கு கிளறவும். 3 நிமிடம் கழித்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
எளிதில் செய்ய கூடிய மாலை நேர சிற்றுண்டி தயார். இதனை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. கலைசெல்வி அவர்கள்.