Author Topic: ~ கற்பூரப் புல் ~  (Read 104 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218524
  • Total likes: 23149
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ கற்பூரப் புல் ~
« on: March 05, 2016, 01:53:38 PM »
கற்பூரப் புல்



நாம் கவனிக்காமல் விடும் அற்புதத் தாவரங்களுள் ஒன்று, கற்பூரப் புல். இதற்கு இஞ்சிப்புல், எலுமிச்சைப் புல் என்ற பெயர்களும் உண்டு. பராமரிப்பு இல்லாமலேயே ஏரிக் கரைகள், வயல் வரப்புகள், மலைப்பகுதிகளில் வளரும். அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இதன் தண்டும் இலையும், அவற்றில் இருக்கும் எண்ணெய்களும் அரிய மருந்துகளாகப் பயன்படுகின்றன.
வாயு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு இது சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. வாயு பிரச்சினை உள்ளவர்கள், சிறிதளவு சர்க்கரையுடன் கற்பூரப் புல் எண்ணெய் ஐந்து மி.லி. கலந்து உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். மலச்சிக்கலையும் குணப்படுத்தும். செரிமானக் கோளாறு, வயிற்றுப் பொறுமல், வயிறு உப்புசம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், கற்பூரப் புல்லின் இலையைக் கசாயம் வைத்து அருந்தினால் குணமடையலாம்.