Author Topic: ~ பொரிச்ச மிளகாய் சம்பல் ~  (Read 337 times)

Online MysteRy

பொரிச்ச மிளகாய் சம்பல்



தேங்காய் - பாதி
செத்தல் மிளகாய் - 10
சின்ன வெங்காயம் - 8
கறிவேப்பிலை - 1 நெட்டு
இஞ்சி - 1/2 இன்ச் (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு

செய்முறை

* செத்தல் மிளகாய், வெங்காயம்,கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணையில் (கருகாமல்) பொரித்து எடுக்கவும்.
*கிரைண்டரில் முதலில் பொரிச்ச
செ.மிளகாய்,உப்பு ,வெங்காயம்,இஞ்சி போட்டு நன்றாக அரைக்கவும்.
* அடுத்து கறிவேப்பிலையையும் போடவும்.
* நன்றாக மிளகாய், வெங்காயம்,கறிவேப்பிலை அரைபட்டு சேர்ந்ததும், தேங்காய்ப்பூ சேர்த்து அரைக்கவும்.

 குறிப்பு : இதனை இடியப்பம்,புட்டு, பாண் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.