Author Topic: ~ வெண்டைக்காய் மண்டி ~  (Read 377 times)

Offline MysteRy

~ வெண்டைக்காய் மண்டி ~
« on: March 04, 2016, 08:11:42 PM »
வெண்டைக்காய் மண்டி



தேவையானவை:

வெண்டைக்காய் – கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை – ஒரு கிண்ணம், அரிசி களைந்த நீர் – 2 கிண்ணம், புளி – எலுமிச்சை அளவில் பாதி, பச்சை மிளகாய் – 3, மிளகாய் வற்றல் – 3, சின்ன வெங்காயம் – 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, பூண்டு பல் – 10, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.