Author Topic: ~ நெத்திலி மீன் வறுவல் ~  (Read 428 times)

Online MysteRy

~ நெத்திலி மீன் வறுவல் ~
« on: March 02, 2016, 09:25:51 PM »
நெத்திலி மீன் வறுவல்



தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் – 1/2 கிலோ
மிளகாய்த்ததூள் -3 ஸ்பூன்
தனியாத்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து நெத்திலி மீனை அதில் கலந்து 15 நிமிடம் ஊறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெத்திலியை போட்டு மொறுவலாக வறுத்து எடுக்கவும். நெத்திலி மீன் வறுவல் ரெடி