Author Topic: ~ கத்திரிக்காய் கொத்சு ~  (Read 714 times)

Offline MysteRy

கத்திரிக்காய் கொத்சு



கத்திரிக்காய் – 3
சின்ன வெங்காயம் – 20
பச்சை மிளகாய் – 4
மிளகாய் வற்றல் – 4
புளித் தண்ணீர் – கால் கப்
பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மல்லி – அரை மேசைக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
வெல்லம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 5 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். கத்திரிக்காயை சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி, மிளகாய் வற்றல் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
அவற்றை சற்று ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், கத்திரிக்காய், பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போட்டு பிரட்டவும். கத்தரிக்காய் சற்று வதங்கும் வரை பிரட்டவும்.
இந்த கலவையை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் 2 மேசைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் கால் கப் புளித்தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொடித்த பொடியை போட்டு கிளறிவிட்டு சுமார் 5 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் அதில் வெல்லத்தை போட்டு ஒரு கொதி வந்ததும் அரைத்த கத்திரிக்காய், வெங்காய கலவையை போட்டு கிளறவும்.
எண்ணெய் நிறைய சேர்த்து கிளறினால் நன்றாக இருக்கும். எல்லாம் சேர்ந்து, நீர் வற்றி திரண்டு வரும் போது இறக்கிவிடவும்.
சுவையான கத்தரிக்காய் கொத்சு தயார். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.