Author Topic: ~ சில்லி இட்லி ~  (Read 386 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226714
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சில்லி இட்லி ~
« on: February 29, 2016, 09:31:57 PM »
சில்லி இட்லி



இட்லி – 10
தக்காளி – 3
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி – 2 கொத்து
சில்லி சிக்கன் மசாலா – 1 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

இட்லியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
இட்லியை சற்று ஆற வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு 20 விநாடிகள் வதக்கவும்.
அதன் பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு வதக்கவும். தக்காளியை நன்கு மசித்து விட்டு வேகவிடவும்.
அத்துடன் உப்பு, சில்லிப் பவுடர் போட்டு நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி மேலே தூவி கிளறவும்.
இப்போது துண்டங்களாக்கி வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விடவும். மசாலா இட்லியில் சேரும்படி பிரட்டி விடவும்.
சுமார் ஒரு நிமிடம் வேகவிட்டு, மசாலா இட்லியில் இறங்கியுள்ளதா என்று ருசி பார்த்து, இறக்கி, அலங்கரித்துப் பரிமாறவும்.