Author Topic: ~ பீட்ரூட் அல்வா ~  (Read 314 times)

Offline MysteRy

~ பீட்ரூட் அல்வா ~
« on: February 29, 2016, 09:29:36 PM »
பீட்ரூட் அல்வா



பீட்ரூட் ஜூஸ் – 2 கப்
தூள் சர்க்கரை – 1 கப்
பொட்டுக்கடலை – 2 கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
முந்திரி – 8

ஒரு பீட்ரூடை தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து பிழிந்து ஜூஸ் எடுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
ஜூஸை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தூள் சர்க்கரை சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
கொதித்து நுரைத்து வரும் போது, கசடாக இருந்தால் அதனை சாரணி கொண்டு எடுத்து விடவும்.
கொதிக்கும் பொது பொட்டுகடலை பொடியை சிறிது சிறிதாக தூவி கட்டிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
தீயின் அளவினை சற்று அதிகம் வைத்து விடாது கிளறவும்.
கெட்டியாக அல்வா பதம் வந்தவுடன் மேலே நெய் ஊற்றி மேலும் கிளறவும். நெய் பிரிந்து வரும் வரை கிளறி பிறகு இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, அல்வாவை எடுத்து வைத்து, மேலே முந்திரி பருப்பு தூவி அலங்கரிக்கவும்.