Author Topic: ~ காலிப்ளவர் ட்ரை மஞ்சூரியன் ~  (Read 300 times)

Offline MysteRy

காலிப்ளவர் ட்ரை மஞ்சூரியன்



காலிப்ளவர் – சிறியதாக ஒன்று
சோள மாவு – 2 1/2 மேசைக்கரண்டி
கடலை மாவு – 1 1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 1/2 மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி
கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
மைதா மாவு – 1 1/2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி

காலிபிளவரை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக காம்புடன் நறுக்கிக் கொள்ளவும். தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை படத்தில் காட்டியுள்ளபடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சோள மாவு, கடலை மாவு, மைதா, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் கலர் பவுடர் அனைத்தையும் கொட்டவும்.
அதில் தண்ணீர் அரை கப் ஊற்றி, கட்டி பிடிக்காமல் பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் நறுக்கின பூண்டு, இஞ்சி போட்டு ஐந்து நொடிகள் வதக்கவும்.
பிறகு அதில் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கரைத்து வைத்த மாவில் காளிஃப்ளவரை தோய்த்து எண்ணெயில் போடவும்.
பதமாய் வெந்ததும் (மொறுமொறுப்பாக வேகக்கூடாது) சாரணி கொண்டு எடுத்து, எண்ணெய் வடியவிடவும்.
பொரித்து எடுத்த காலிப்ளவரை வெங்காய கலவையில் போட்டு வதக்கவும்.
அரை மேசைக்கரண்டி சோளமாவுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்து, காளிஃப்ளவர் கலவையுடன் ஊற்றி உடனே வதக்கவும். இல்லையென்றால் கட்டியாகிவிடும்.
அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ் ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும். பரிமாறும் பொழுது நறுக்கின கொத்தமல்லி தூவவும்.