Author Topic: ~ தக்காளி தொக்கு ~  (Read 389 times)

Offline MysteRy

~ தக்காளி தொக்கு ~
« on: February 27, 2016, 08:40:20 PM »
தக்காளி தொக்கு



தேவையானவை :

தக்காளி - அரை கிலோ
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்.
உப்பு - 2 டீஸ்பூன்.
பூண்டு - 4
கடுகு - 1 டீஸ்பூன்.
எண்ணெய் - 100 கிராம்
வெந்தயம், பெருங்காயம் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

தக்காளி, மிளகாய்த் தூள், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். இதை அடி கனமான பாத்திரத்தில் போட்டு இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு ஓரளவுக்கு தண்ணீர் வற்றியதும்,.அடுப்பில் காடாயை வைத்து கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து தக்காளி கலவையில் சேர்த்து இறக்கவும். அந்த கலவைகளில் சேர்த்து இறக்கவும்.