Author Topic: ~ மாதுளை சாக்லேட் ~  (Read 397 times)

Offline MysteRy

~ மாதுளை சாக்லேட் ~
« on: February 26, 2016, 08:21:42 PM »
மாதுளை சாக்லேட்



தேவையான பொருட்கள் :

டார்க் சாக்லேட் – 1 பார் (உருக்கியது)
தேன் – கால் கப்
தேங்காய் எண்ணெய் – கால் கப்
பாதாம் வெண்ணெய் – கால் கப்
மாதுளை – கால் கப்
நட்ஸ் – சிறிதளவு
பிளம்ஸ் – சிறிதளவு

செய்முறை :

• அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் டார்க் சாக்லேட்டை போட்டு மைக்ரோ ஓவனில் 30 விநாடிகள் வைத்து மெல்ட் செய்யவும்.
• நட்ஸ், பிளம்ஸ் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• மெல்ட் ஆன சாக்லேட் கலவையில் தேன், பாதாம் வெண்ணெய், நட்ஸ், பிளம்ஸ் போட்டு கிளறவும்.
• தட்டையான தட்டில் இந்த சாக்லேட் கலவையை ஊற்றி அதன் மேல் மாதுளை முத்துக்களை போட்டு பிரிட்ஜில் 2 முதல் 3 மணி நேரம் வைக்கவும்.
• பின்னர் பிரிட்ஜில் இருந்து எடுத்து துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.