Author Topic: ~ மரவள்ளிக்கிழங்கு பணியாரம் ~  (Read 326 times)

Offline MysteRy

மரவள்ளிக்கிழங்கு பணியாரம்



தேவையானவை:

மரவள்ளிக்கிழங்கு துருவல் – 3 கப்
தோசை மாவு – ஒரு கப்
தேங்காய் துருவல் – ஒருகப்
காய்ந்த மிளகாய் – 8
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண் ணெய், உப்பு –
தேவையான அளவு.

செய்முறை:

தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக
அரைக் கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும்
இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு
கலக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி,
காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து, பணியாரங்களைத்
திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.