Author Topic: ~ மோர் இட்லி ~  (Read 318 times)

Offline MysteRy

~ மோர் இட்லி ~
« on: February 21, 2016, 09:15:37 PM »
மோர் இட்லி



தேவையான பொருட்கள்:

இட்லி மாவு  – 2 கப்
கெட்டியாக கடைந்த மோர் – 2 கப்,
மோர் மிளகாய் – 7,
சிவப்பு மிளகாய் – 2,
வெந்தயம்  – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை  – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

• இட்லி மாவை மினி இட்லிகளாகவோ, மீடியம் இட்லிகளாகவோ வேக வைத்து எடுக்கவும். பெரிய இட்லிகளாக இருந்தால் சம அளவில் வெட்டிக் கொள்ளவும்.
• மோரில் மூன்றில் இரண்டு பங்கு எடுத்து… தாளித்த வெந்தயம், உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, வறுத்த சிவப்பு மிளகாயை நசுக்கிப் போட்டு, நன்கு கலந்து வைக்கவும்.
• மோர் மிளகாயைத் தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
• மீதியுள்ள ஒரு பங்கு மோரில் சிறிதளவு நீர் விட்டு கலந்து, சூடான இட்லிகளை அதில் போட்டெடுத்து, பெரிய தாம்பாளத்தில் பரத்தவும்.
• தாளித்து வைத்த கெட்டி மோரில், வறுத்த மோர் மிளகாயை நசுக்கிப் போடவும். இட்லிகள் மீது இந்த மோர் கலவையை விட்டு, கொத்தமல்லித்தழை தூவி, பவுலில் வைத்து, ஸ்பூன் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.