Author Topic: ~ தண்ணீர் குடித்தால் நோய்கள் பறந்தோடும் ~  (Read 397 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226753
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தண்ணீர் குடித்தால் நோய்கள் பறந்தோடும்



வந்தாச்சு. வெயில் காலம் வந்தாச்சு. இனி எல்லோருக்கும் சொல்ல வேண்டியது சுத்தமான தண்ணீர் குடியுங்கள் என்பதுதான். நீர் இன்றி அமையாது உலகு என்பது போல் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நீர் அவசியம்.

* விவசாயம்
* குடிக்க
* குளிக்க
* சமைக்க
* துணிகளை துவைக்க
* பாத்திரங்களை சுத்தம் செய்ய
* வீட்டை சுத்தமாய் வைக்க
* நீச்சல் போன்ற உடற்பயிற்சி செய்ய
* அழகான தோட்டம் அமைக்க என எதற்குத்தான் தண்ணீர் இல்லாமல் முடியும்?
ஆனால் இதே நீர் சுத்தமாக இல்லையென்றால் எத்தனை நோய்கள் மனிதனை தாக்கும் தெரியுமா? நீர் சுத்தமின்மையால் ஏற்படும் தாக்குதலில் இறப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா? இந்த தண்ணீரை சுத்தமா வைத்திருக்க நாம் உதவுகின்றோமா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
* விலங்குகளை குளிப்பாட்டுகிறோம்.
* குப்பைகளை கொட்டுகிறோம்
* எண்ணெய், தொழிற்சாலை குப்பைகள்
* மணல்
* ரசாயனங்கள் இவற்றினை சேர்த்து நமக்கும், பிறக்கும் தீங்கு செய்கின்றோம்.
எனவே நமக்கு நன்மை செய்யும் தண்ணீரும் தெய்வம்தான். அதனை அசுத்தம் செய்யாதிருப்பது நீங்கள் செய்யும் சமூக சேவையாக அமையட்டும். அது போன்று வீட்டில் தண்ணீர் தொட்டியை சுகாதாரமாய் பராமரித்து மூடி வைத்து, குடிநீரினை முறையாய் சுத்திகரிப்பு செய்து குடியுங்கள்.
இந்த அடிப்படை சுகாதாரங்களை உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். ஏன் தண்ணீர் இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. தண்ணீர் இல்லாமல் வாழ்வு இருக்காது. அவ்வப்போது சுத்தமான நீர் சிறிதளவு உடலுக்கு வேண்டும். தண்ணீர் மாஜிக் போல பல நோய்களுக்கு தீர்வு தரும். சாதாரண தலைவலி, சோர்வு, மூட்டு வலி இவையெல்லாம் தண்ணீர் குடித்தாலே சரியாகி விடும். 3 நாளுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் ஒருவர் உயிரோடு இருக்க முடியாது.
* காற்றடைத்த குளிர்பானங்களும், மதுவும் மிக அதிகமான நீரை உடலிலிருந்து திருடி விடும்.
* நாம் குடிக்கும் நீர் தான் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும்.
* 12 அவுன்ஸ் தண்ணீர் நீங்கள் குடித்தால் 8 அவுன்ஸ் தண்ணீரை உடல் 15 நிமிடத்தில் உறிஞ்சி விடும்.
* நீர் வறட்சி உடலில் வெயில் காலத்தில்தான் ஏற்படும் என்பதில்லை. குளிர் காலத்திலும் ஏற்படும்.
* குளிர் பானங்கள் தாகத்தை தணிக்காது.
* குளிர் பானங்களில் உள்ள பாஸ்பேட் உடலிலுள்ள தாது உப்புக்களை உறிந்து விடும். இது மக்னீசிய குறைபாடினை ஏற்படுத்தி இருதய பாதிப்பினை ஏற்படுத்தும். கால்ஷிய குறைபாட்டினை ஏற்படுத்தி எலும்பினை உருக்கி விடும்.
* புட்டியில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் ஜீரண குறைபாட்டினை ஏற்படுத்தும். காபியும் அதிலுள்ள சர்க்கரையும் ஜீரண சக்தியினை அடியோடு அடைத்து விடும். இதனால் உடலால் எந்த சத்துகளையும் எடுத்துக் கொள்ள முடியாது.
* புட்டியில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் ‘அசிடிடி’ எனப்படும் நெஞ்நெரிச்சல் பாதிப்பினை வெகுவாய் உருவாக்கும். எனவே நீர் குடியுங்கள்.
* குளிர் பானங்களில் உள்ள அதிக சர்க்கரை உங்கள் கணையத்தினை அதிக இன்சுலின் உருவாக்க வைக்கும். இதனால் முறையற்ற இன்சுலின் சுரப்பதினால் எளிதில் ‘சர்க்கரை நோய்’ உருவாகும். ஆக சுத்தமான நீரே அதற்கு எவ்வளவோ சிறந்தது.
உடலில் நீர் குறைந்துள்ளது என்பது உடலில் தேவையான நீரும் உப்புக்களும் குறைந்துள்ளது என்று பொருள். இந்த தாது உப்புகள் உடலின் மிகப்பெரிய வேலையான செல்களின் செயல்பாட்டிற்குத் தேவைப்படுகின்றது. குறிப்பாக தசைகளின் செல்களின் செயல்பாட்டிற்கும், ரத்த செல்களின் செயல்பாட்டிற்கும் நீரும், தாது உப்புகளும் மிக முக்கியமாகின்றது. நீர் சத்து குறைவு மிக ஆபத்தான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். நீர் குறைவு என்பது பொதுவில் மூச்சு விடுவதிலும், வியர்வையிலும், சிறுநீர் வெளியேற்றத்திலும் ஏற்படுவது. இது முறையான அளவு நீர் உட்கொள்வதால் சரியாகின்றது.
ஆனால் உடலில் நீர் குறைவது அதிக உடற்பயிற்சி செய்வதாலும் அதிக வெப்பத்தாலும், செரிமானக் கோளாறுகளால் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும் பொழுதும் உருவாகின்றது. ஃப்ளூ, உணவில் விஷம், அதிக உணவு இவற்றால் வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்படலாம். வயிற்றுப் போக்கு ஏற்படும் பொழுது ஒவ்வொரு முறையும் சிறிது நீர் உட்கொள்ள வேண்டும். அதிக மது அருந்துதல் உடலில் நீர் குறைய வாய்ப்பு ஏற்படுத்தும். அது போல் சில மருந்துகள் உடலில் நீர் குறைய வாய்ப்பு ஏற்படுத்தலாம்.
வறட்சியின் அறிகுறிகள்
மிதமான வறட்சி
அதிகமான வறட்சி
* வாய் உலர்ந்து, ஓட்டிக் கொள்ளுதல் – மிக அதிகமான தாகம்
* சோர்வு, தூக்கம்- குழப்பம் எரிச்சல்
* வறண்ட சருமம்- உள்ளடங்கிய கண்
* தலைவலி- வறண்ட சருமம் சற்று அழுத்திப் பார்த்தால் உடனே திரும்ப எழாது.
* மலச்சிக்கல்- குறைந்த ரத்த அழுத்தம்
* தலை சுற்றல்- வேகமான இருத துடிப்பு
* அழும்பொழுது குறைந்த கண்ணீர் (அ) கண்ணீர் இன்மை- வேகமான மூச்சு
* மிகக்குறைந்த சிறுநீர்போக்கு அழும்பொழுது சுத்தமாக கண்ணீர் இன்மை
* வறண்ட, குளிர்ந்த சருமம்- ஜுரம்
* தசை இறுக்கம் – சிறுநீர் இன்மை (அ) அடர்ந்த சிறுநீர் சுயநினைவின்மை சிறு குழந்தைகளுக்கு நீர்வற்றும் தன்மை அதிகம் என்பதால் அவர்களை அதிகம் கவனிக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு உச்சந்தலை மென்மையாக இருந்தால்
* அழும்பொழுது கண்ணீர் குறைந்தோ இல்லாமலோ இருந்தால்
* வறட்சியான வாய்
* குறைந்த சிறுநீர்
* சோர்வு வேகமான மூச்சு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவ உதவி அவசியம்.
தொடர் நீர் வறட்சி இருந்தால் சிறுநீர்கள், கொழுப்பு, மலச்சிக்கல், கல்லீரல் பாதிப்பு, மூட்டு பாதிப்பு, தசை பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதேபோன்று வயதானவர்களுக்கும் நீர்சத்து குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஒருவரின் அன்றாட நீர் தேவை தினம் தினம் சற்று மாறுபடலாம். ஒழுங்காக சாப்பிட்டுப் பசி எடுப்பது போல் தோன்றலாம். முதலில் தண்ணீர் குடியுங்கள். அநேகமாக சரியாகி விடும்.
உடற்பயிற்சி செய்யும்பொழுது:
உடற்பயிற்சி செய்யும் முன்பு சுமார் 20 நிமிடங்கள் முன்பு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். -1 கப் தண்ணீர் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை குடியுங்கள். உங்கள் உடற்பயிற்சியின் கடுமைக்கு ஏற்றாற்போலவும், சுற்றுசூழ்நிலையின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போலவும் உங்கள் உடலில் நோய் இருந்தால் அதற்கு ஏற்றாற்போலவும் நீங்கள் கர்ப்பமாகவோ அல்லது தாய் பால் கொடுப்பவராகவோ இருந்தால் அதற்கு ஏற்றாற்போலவும், கடின உழைப்பு உடையவராகவும் இருந்தால் அதற்கு ஏற்றாற்போலவும் நீர் குடியுங்கள்.
உடற்பயிற்சிக்கு முன்பும், பின்பும் நீர்குடியுங்கள். தினமும் காலை முதல் நீர் குடிக்க ஆரம்பியுங்கள். நாள் ஒன்றுக்கு எட்டு கிளாஸ் குடியுங்கள். எட்டு கிளாஸ் நீர் 1.9 லிட்டர், ஆண்களுக்கு 2 லிட்டர், பெண்களுக்கு 2.2 லிட்டர். ஒருவரின் நீர்தேவைக்கு அதிக சர்க்கரை சேர்த்த குளிர்பானம் ஸ்போர்ட்ஸ் டிரிங்க் இவை நீர்வறட்சிக்கு அதிகம் உதவாது. காபி, சோடா இவை இரண்டும் உடலில் உள்ள நீரினை வெளியேற்றும் என்பதால் நீர் சத்தினை தங்க வைக்க உதவாது. 2 சதவீதம் நீர் இழப்பு உடலில் ஏற்பட்டாலே உங்களுக்கு தாகம் ஏற்பட்டு விடும்.
• உலகத்திற்கு மிக முக்கியமானது தண்ணீர். ஆனால் சுகாதாரமற்ற நீரினால் ஒரு மணி நேரத்திற்கு 200 குழந்தைகள் இறக்கின்றனர்.
• மனித மூளையில் 70% நீர்தான்.
• நான் மூச்சு வெளி விடுவதில் 1கப் நீர் (250 மி.லி.) வெளியேறுகின்றது.
• ரத்தத்தின் 80% நீர்தான்.
• எலும்புகளில் 22% நீர்தான்.
• சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் உடலில் திசுக்களுக்கு கொண்டு செல்வது நீர்தான்.
• தசைகளின் 75 % நீர்தான்.
• உணவை சக்தியாக மாற்ற உதவுவது நீர்தான்.
• ஆக்ஸிஜனை மூச்சுக்காக ஈரப்படுத்துவது நீர்தான்.
• தேவையான அளவு தண்ணீர் குடிப்பது குடல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், மார்பக புற்று நோய் இவற்றினை தவிர்க்கும்.
• உடலிலுள்ள கிருமிகளை வெளி தள்ளுவது நீர்தான்.
• அநேகருக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பொழுது முதுகு வலி, முட்டில் வலி நீங்குகின்றது.
• அதிக நீரை ஒரே நேரத்தில் குடிப்பது உடலில் சோடியத்தினை குறைத்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
• இத்தகு பாதிப்பு அநேகமாகமாக விளையாட்டு வீரர்களிடையே காணப்படும்.
• சுத்தமில்லாத நீரால் பலவகை புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும்.
• குழாய் நிரில் அதிக அளவு குளோரின் இருந்தால் முடி, சருமம் இவை அனைத்தும் பாதிக்கப்படும்.
• குளிக்கும் நீரில் அதிக குளோரின் இருந்தால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் பாதிப்பு எளிதில் ஏற்படும். நீர் இன்றி அமையாது உலகு.