Author Topic: ~ ராகி பூரி ~  (Read 341 times)

Offline MysteRy

~ ராகி பூரி ~
« on: February 19, 2016, 09:27:16 PM »
ராகி பூரி



தேவையான பொருட்கள்:

ராகி மாவு – ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு கப்
ரவை – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
ராகி பூரி
மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பூரி மாவாக பிசைந்து கொள்ளவும்.
மாவை நீளமாக உருட்டி அதை சிறுத் துண்டுகளாக வெட்டி உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் பூரிகளாக திரட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான ராகி பூரி தயார்