Author Topic: ~ சிக்கன் ரோஸ்ட் ~  (Read 327 times)

Online MysteRy

~ சிக்கன் ரோஸ்ட் ~
« on: February 19, 2016, 09:05:12 PM »
சிக்கன் ரோஸ்ட்



தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரை கிலோ
தக்காளி ப்யூரி – 2 தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
தக்காளி – கால் கிலோ
குடைமிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
தயிர் – 4 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை
உப்பு

செய்முறை:

முதலில் சிக்கனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நறுக்கி வைக்கவும்.
ஊறவைத்த சிக்கனுடன் தூள் வகைகள் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.
அதனுடன் தக்காளி ப்யூரி சேர்த்து மீண்டும் வேகவிடவும்.
பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வேகவிடவும்.
சிறிது எண்ணெய் விட்டு நன்கு சுருள வேகவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான சிக்கன் ரோஸ்ட் தயார்.