Author Topic: ~ சுரைக்காய் பொரியல் ~  (Read 502 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சுரைக்காய் பொரியல் ~
« on: February 19, 2016, 09:01:25 PM »
சுரைக்காய் பொரியல்



தேவையான பொருட்கள்:

சுரைக்காய் – 1 கப் வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) கடுகு – 1/4 டீஸ்பூன் வரமிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, பின் சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி, சுரைக்காய் நன்கு மென்மையாக வெந்தது, தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி பிரட்டி இறக்கினால், சுரைக்காய் பொரியல் ரெடி!!!